அஹங்கம பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் ரயிலில், அஹங்கம கந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள முச்சக்கர வண்டியின் சாரதி காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.