குழந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புக்களை அறிவுரைத்துள்ளார்.
தற்போது வளர்ந்திருக்கும் தொழிநுட்பம் காரணமாக ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதனால் உண்டாகும் பாதிப்பு உடனடியாக நமக்கு காட்டாது. எனவே இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

பெற்றோர்கள் தற்போதெல்லாம் சோறு ஊட்டுவதற்கு கூட கழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கின்றனர். இது அந்த நோரத்தில் பயன்னுள்ளதாக இருந்தாலும் போக போக இது பல உபாதைகளை உண்டாக்கும்.
இதை தான் மருத்துவர் ஷர்மிகா பெற்றோர்களுக்கு அறிவுரைக்கிறார். அவர் குழந்தைகளிடம் இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
அதிக செல்போன் பயன்பாடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். அன்றாடம் வளர்ச்சி அடையும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய குழந்தைகள் கூட நவீன கருவிகளை பயன்படுத்தும் திறன்களை பெற்றுள்ளனர்.

குறிப்பாக செல்போன், கணினி போன்றவற்றை பெரியவர்களை விட குழந்தைகள் எளிதாக பயன்படுத்துகின்றனர். இது நன்மையாக இருந்தாலும் இதில் இருக்கும் தீமைகள் அறிந்து பயன்படுத்துவது அவசியம்.
குழந்தைகள் அதிகமாக தொழிநுட்பத்திற்கு பழகியது கொரோனா தொற்றின் மூலம் தான். இதன் தாக்கம் இன்றும் கூட நிறைய வகுப்புகளை ஆன்லைன் வாயிலாக கற்கும் நிலைக்கு சென்றுள்ளது.
இதற்கு மருத்துவரின் அறிவுரை தேவைப்படும் போது மட்டுமே குழந்தைகளை செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

அந்த வகையில் இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
குழந்தைகளை இதற்கு கட்டாயம் பழக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
அதீத செல்போன் பயன்பாடு குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், நினைவாற்றல் மற்றும் கற்பனை திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.
எனவே, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக இப்போதே சில மாற்றங்களை செய்ய வேண்டும் இது பெற்றோருக்கு மிகவும் தேவையான ஒன்று.

இதற்கு பழக குழந்தைகளுக்கு முதலில் சிரமமாக இருக்கும். ஆனால், குழந்தைகளின் மனதை வேறு விஷயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை எளிமையாக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
அதிக குழைந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது இந்த நினைவாற்றலால் தான். இது பாதுக்கபடுவது செல்போன் பயன்பாட்டின் மூலம் தான்.
எனவே குழந்தைகளுக்கு தேவைக்கு மட்டும் செல்பொன் கொடுத்துவிட்டு எவ்வளவு தேவை இருப்பினும் இரவு 8 மணிக்கு செல்போன் கொடுப்பதை தவிர்த்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இதற்கு பதிலாக அவர்களுடன் விளையாடுங்கள் பேசுங்கள் கதை சொல்லுங்கள் இன்னும் பல புதிய விடயங்களை கற்றுக்கொடுங்கள்.