காய்ச்சல் காரணமாக பெண் உயிரிழப்பு

ByEditor 2

Apr 28, 2025

யாழில். காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.  

இதன்போது 2ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய கமலநாதன் ராஜபத்மினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண்ணுக்கு சனிக்கிழமை (26) காலை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி  திங்கட்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *