முக்கோண காதல் துயரில் முடிந்தது

ByEditor 2

Apr 27, 2025

இரண்டு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்தமையால் ஏற்பட்ட தகராறை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக மாணவன்,  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.  

யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும்  கொட்டகலையைச் சேர்ந்த 24 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைகழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவிகள் இருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பு, சண்டையில் முடிந்ததால் இவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *