காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்த மாணவன்

ByEditor 2

Apr 27, 2025

காலி கோட்டையில் இருந்து விழுந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த தவலம கமகே ஜனித் சந்துல (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்

அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது நண்பர்கள் குழுவுடன் காலி கோட்டைக்குச் சென்றிருந்தார்.

காலி கோட்டையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து செல்லும் போது அவர் விழுந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோட்டை சுவரில் இருந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர், பொலிஸ் அதிகாரிகளால் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நேரத்தில் இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *