புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
ஓவல் அலுவலகத்தில் நடந்த கொந்தளிப்பான சந்திப்புக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னரான இந்த சந்திப்பு வியக்க வைப்பதாக பி,பி,சி, தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்க ட்ரம்ப் முயல்கையில், இந்த உரையாடலும் பின்னர் நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பும் முக்கியமானாக இருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.