உலகின் முதல் தங்க ATM

ByEditor 2

Apr 22, 2025

சீன நிறுவனமொன்று உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர்.

ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உலகின் முதல் தங்க ATM ; எங்குள்ளது தெரியுமா? | World S First Gold Atm In China

 சீன மக்களிடம் அமோக வரவேற்பு

இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. அந்த தங்க ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

உலகின் முதல் தங்க ATM ; எங்குள்ளது தெரியுமா? | World S First Gold Atm In China

சீன கிங்ஹுட் குழுமம் பராமரிக்கும் இந்த தங்க ATM தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்.

தினசரி தங்கத்தின் விலையை ATM, திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ATM இமில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *