உலகின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியில் இலங்கை

ByEditor 2

Apr 22, 2025

பல நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்ற, உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியான Word Expo கண்காட்சியில், இலங்கையின் சுற்றுலா, கலாச்சாரம், சுதேச மருத்துவம், தேயிலை மற்றும் ஆடை உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாக இலங்கையை முன்னிலைப்படுத்த பல முன்னணி அரச மற்றும் தனியார் பங்குதாரர்கள் இங்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

Word Expo கண்காட்சியின் நோக்கம், உலகின் பிற நாடுகளுடன் அனைத்துத் துறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவைப் பரிமாறிக் கொள்வதும், ஒரு நாட்டின் பொருளாதார, கலாச்சார மற்றும் அறிவியல் சாதனைகளைக் காண்பிப்பதன் மூலம் அதன் பிம்பத்தை மேம்படுத்துவதுமாகும்.

ஏப்ரல் 13 முதல் அக்டோபர் 13 வரை ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறும் றுழசன Word Expo கண்காட்சி 2025, ‘நமது வாழ்விற்கான எதிர்கால சமூகத்தை வடிவமைத்தல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும், மேலும் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறது.

ஒசாகாவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *