சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக வரும் வியர்க்குரு பிரச்சனை…

ByEditor 2

Apr 21, 2025

நீரிழிவு நோயாளிகளுக்கு வியர்க்குரு, வெப்ப சொரி அதிகமாக வருமா? என்பதையும் அதற்கான தீர்வையும் தெரிந்து கொள்வோம்.

வியர்க்குரு

வியர்க்குரு அல்லது வெப்ப சொரி, மருத்துவ ரீதியாக மிலியாரியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளில் ஏற்படும் ஒரு தோல் பிரச்சனையாகும்.

இவை முகம், கழுத்து, மார்பு, இடுப்பு மற்றும் தோள்பட்டைகளில் அதிகமாக காணப்படும். கோடை பருவத்தில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, தோல் சுரப்பிகள் மறைந்து கெட்டுப்போகும் போது, சிறிய துளிகள் அல்லது பிசுபிசுப்பு தோல் பாதிப்புகள் ஏற்படும்.

மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு) மற்றும் மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) ஆகிய மூன்று வகைகள் உள்ளன.

இதன் முக்கிய காரணிகளாக அதிக வெப்பம், ஈரப்பதம், காய்ச்சல், மரபணு காரணங்கள், உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கம் உள்ளன.

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலோருக்கு காணப்படும் நரம்பு பாதிப்பு மற்றும் ரத்த நாளங்களின் அடைப்புகளால் தோல் வறட்சி ஏற்பட்டு வியர்க்குரு அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக வரும் வியர்க்குரு பிரச்சனை... இதற்கான தீர்வு இதோ | Diabetes Student Heat Rash Problem

தீர்வு என்ன?

குளிர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் தூங்கவும், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

சருமத்திற்கு உபாதையளிக்கும் பொருட்களை தவிர்க்கவும். வெப்பத்தில் அதிக நேரம் கழிக்காமல், குடையை பயன்படுத்தவும்.

தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். பெரும்பாலான நேரங்களில் வியர்க்குரு தானாக சரியாகிவிடும்.

ஆனால் வலி மற்றும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலாசனை பெற்று சில கிரீம்களை பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக வரும் வியர்க்குரு பிரச்சனை... இதற்கான தீர்வு இதோ | Diabetes Student Heat Rash Problem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *