82 வயதிலும் களறி பயிற்சியளிக்கும் வீரப்பெண்

ByEditor 2

Apr 21, 2025

பண்டைய இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டுவை அல்லது களறி என்ற கலையை தமது 82 வயதிலும் கற்பிக்கும் பெண்மணி ஒருவர், தாம் இந்தக் கலையில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

தாம் இறக்கும் வரை களரி பயிற்சி செய்யப்போவதாக என்று மீனாட்சி ராகவன் என்ற இந்த பெண்மணி கூறியுள்ளார்.

உலகின் மிக வயதான பெண் 

இதன்படி, இந்த கலை வடிவத்தை பயிற்சி செய்யும் மற்றும் கற்பிக்கும் உலகின் மிக வயதான பெண் என்று மீனாட்சி ராகவன் கருதப்படுகிறார்.

களரிபயட்டு – களரி என்றால் போர்க்களம் என்றும் பயட்டு என்றால் சண்டை என்றும் பொருள்படும்.

குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர்,தென் மாநிலமான கேரளாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் இது இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையாகக் கருதப்படுகிறது.

அதேவேளை விஸ்ணு தெய்வத்தின் 6வது அவதாரமான பரசுராமன் இந்தக்கலையை சிவனிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன.

பிள்ளையான் விவகாரத்தில் திடீர் திருப்பம்! 24 மணித்தியாலத்தில் முக்கிய அறிவிப்பு

 தற்கால கலை

இந்த கலை சண்டைக்காக மட்டும் பயிற்சி செய்யப்படவில்லை. இது ஒழுக்கத்தை வளர்க்கவும், வலிமையை வளர்க்கவும், தற்காப்புத் திறன்களை வளர்க்கவும் உதவுகிறது.

82 வயதிலும் களறி பயிற்சியளிக்கும் வீரப்பெண்- சாகும் வரை ஓய்வுப்பெறப் போவதில்லை என்று அறிவிப்பு | 82 Year Old Woman Still In Karate

அத்துடன் குங் ஃபூ என்ற தற்கால கலையின் சுவாச நுட்பங்கள் மற்றும் மர்மசாஸ்திரம் என்ற ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்த முக்கிய புள்ளிகளைத் தூண்டுதல் போன்ற கொள்கைகள், களறி பயிற்சியில் இருந்தே தழுவப்பட்டன என்று நம்பப்படுகிறது.

மீனாட்சி ராகவன், கேரளத்தின் வடகராவில் வசிக்கிறார். மீனாட்சி அம்மா என்று அழைக்கப்படுகிறார்.

மீனாட்சி அம்மா எப்போதாவது ஏனைய நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார், அதேநேரம், 1950 ஆம் ஆண்டு தனது கணவரால் நிறுவப்பட்ட தனது சொந்த களரி பாடசாலையை நடத்துகிறார்.

சீன தற்காப்புக் கலை

களரிபயட்டு நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது, மேலும் கலை வடிவத்தைக் கற்றுக்கொள்ள பொறுமை தேவை. மெய்ப்பாடு – எண்ணெய் தேய்தல்; அதைத் தொடர்ந்து உடலை சீரமைக்கும் பயிற்சிகள் மூலம் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.

82 வயதிலும் களறி பயிற்சியளிக்கும் வீரப்பெண்- சாகும் வரை ஓய்வுப்பெறப் போவதில்லை என்று அறிவிப்பு | 82 Year Old Woman Still In Karate

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர்கள் கோல்தாரி (குச்சி சண்டை), பின்னர் அங்கதாரி (ஆயுத சண்டை), இறுதியாக வெரும்கை – ஆயுதம் ஏந்தாத சண்டையை உள்ளடக்கிய மிக உயர்ந்த நிலை வரை கற்றுக்கொள்கிறார்கள் களரிபயட்டில் தேர்ச்சி பெற பொதுவாக ஐந்து ஆண்டுகள் வரை கற்றலில் ஈடுபடவேண்டியிருக்கும்.

6 ஆம் நூற்றாண்டில், இந்திய புத்த துறவி போதிதர்மர் இந்த நுட்பங்களை துறவிகளுக்கு அறிமுகப்படுத்தினார், இது மிகவும் பிரபலமான சீன தற்காப்புக் கலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் புராணக்கதைகள் கூறுகின்றன. மீனாட்சி அம்மா 75 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த கலை பயிற்சியில் ஈடுபட்டதை நினைவுப்படுத்துகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *