வெல்லவாய நகரில் உள்ள நான்கு வழிச் சந்திக்கு அருகில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லவாய குமாரதாச வீதியைச் சேர்ந்த முகமது நிஷாம் (22) என்ற இளைஞன் ஆவார்.
அவர் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில், பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த காருடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஆபத்தான நிலையில் இருந்த 22 வயதுடைய இளைஞன், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் சடலம் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.