உண்மையான தர்பூசணி; வீட்டிலேயே கண்டறிய வழிகள்

ByEditor 2

Apr 19, 2025

கோடைகாலத்தில் எல்லோரும் நீர்ச்சத்துபழங்களை தேடி ஓடுவது வழக்கம். அதில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருப்பது தர்ப்பூசணி பழம் தான்.

இது அதிக மக்கள் விரும்பி வாங்கும் காரணத்தினால் இதை சந்தைப்படுத்தும் விவசாயிகள் இதில் கலப்படத்தை சேர்க்கிறார்கள்.

பொதுவாக சிறியவர்கள் பெரியவர்கள் கர்ப்பிணிகள் என அனைவரும் இப்பழத்தை விரும்பி சாப்பிடுவதால் இதை கலப்படம் செய்த விற்க ஆரம்பித்து விட்டார்கள்.  இதில் இருக்கும் இரசாயன கலப்படம் மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

எனவே நாம் சந்தையில் தர்ப்பூசணியை வாங்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் அதை கலப்பட தர்பூசணி கண்டறிந்து எப்படி வாங்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

போலி VS உண்மையான தர்பூசணி: வீட்டிலேயே கண்டறிய வழிகள் என்ன? | Fake Vs Real Watermelon Ways Check Purity At Home

 போலி VS உண்மையான தர்பூசணி

தர்பூசணிகள் பழுத்த தோற்றமளிக்க எரித்ரோசின் என்ற சிவப்பு சாயம் சேர்க்கப்படுகிறது. இது ஒரு பருத்தி மூலம் அடையாளம் காணலாம்.

உண்மையான தர்பூசணியின் சிவப்பு பகுதியில் பருத்தி துணியால் மெதுவாக தேய்த்தால் எந்த நிறமும் நீங்காது. ஆனால் போலி தர்பூசணி மீது பருத்தியைத் தேய்த்தால் அதில் சிவப்பு நிறம் ஒட்டிக்கொள்வதைக் காணலாம்.

போலி VS உண்மையான தர்பூசணி: வீட்டிலேயே கண்டறிய வழிகள் என்ன? | Fake Vs Real Watermelon Ways Check Purity At Home

இயற்கையான தர்பூசணி அதன் சுவை மூலம் அடையாளம் காணக்கூடியது. சுவை குறையாது. ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியில் இருந்து எந்த சுவையும் இருக்காது.

பலர் தர்பூசணிகளை வாங்கி சேமித்து வைப்பார்கள். இயற்கையான தர்பூசணி பழங்கள் எளிதில் கெட்டுப்போகாது. ஆனால் ரசாயனம் கலக்கப்பட்ட  தர்பூசணி என்றால், விரைவில் அழுகிவிடும்.

போலி VS உண்மையான தர்பூசணி: வீட்டிலேயே கண்டறிய வழிகள் என்ன? | Fake Vs Real Watermelon Ways Check Purity At Home

இதற்கு தர்பூசணியை வாங்கி இரண்டு நாட்கள் வைத்திருக்கவும். ஒருவேளை அதில் ரசாயன கலப்படம் செய்யப்பட்டிருந்தால் விரைவில் அழுகிவிடும். அப்படி இல்லையானால் அது உண்மை தர்பூசணி.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடாக்கி, ஒரு துண்டு தர்பூசணி சேர்க்கவும். தண்ணீர் விரைவில் சிவப்பு நிறமாக மாறினால், தர்பூசணி சாயம் பூசப்பட்டது என்பதை அறியலாம். இதுபோன்ற இன்னும் பல வழிகள் உள்ளது. 

இது தவிர கடைகளில் நல்ல தர்பூசணி வாங்க தர்பூசணியின் மேற்பகுதியில் விரல்களால் தட்ட வேண்டும். இப்படி தட்டும் போது அதில் ஆழமான வெற்று ஒலி இருந்தால் மட்டுமே அது நல்ல தர்பூசணியாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *