AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை..!

ByEditor 2

Apr 19, 2025

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது.

சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தரும் வகையில் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் குழந்தை

இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு தாதியர் அல்லது அவருக்கு இணையான இன்னொருவர் தேவைப்படாது என்றும் வைத்தியர்களே AI உதவி மூலம் நோயாளிகளின் முழு விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில்தான், ஏஐ உதவியுடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.

மனிதர்களின் பார்வையின்றி (AI) தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் IVF (மருத்துவ உதவியுடன் கருத்தரித்தல்) முறையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது.

இந்த புதிய முறையில், வழக்கமாக மனிதர்களின் கையால் மேற்கொள்ளப்படும் Intracytoplasmic Sperm Injection (ICSI) என்ற செயல்முறை 23 படிகளும் முழுமையாக தானியங்கி முறையில், ஏஐ உதவியுடன் முடிக்கப்பட்டுள்ளது.

சாதனை

Hope IVF Mexico மருத்துவமனையில் 40 வயதான ஒரு பெண்யின் முட்டைகளின் உதவியுடன் இந்த முறையில் கருத்தரித்து ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

ஐந்து முட்டைகள் இந்தநவீன முறையில் கருக்கூட்டப்பட்டதில் நான்கு வெற்றிகரமாக கருக்கூட்டப்பட்டன.அதில் ஒன்று வெற்றிகரமாக வளர்ந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் உள்ள Conceivable Life Sciences என்ற நிறுவனத்தின் நிபுணர்களும் வைத்தியர்களும் இந்த சாதனையை செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *