திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

ByEditor 2

Apr 19, 2025

மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மணமகன் பலி 

உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்திவெளியில் நேற்று நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக உணவினை பெற்றுக்கொள்ள சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞன் 9 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *