தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான்.
அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல காரணங்கள் மன அழுத்தம் உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சமீபத்தில், சர்வதேச விஞ்ஞானிகள் நடனம் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்க முடியுமா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் நடனத்தின் மூலம் மன உறுதி அதிகரிக்கக்கூடும் என்றும் கண்டறிந்துள்ளனர். நடனம் ஆடுவது உடற்பயிற்சியின் மகிழ்ச்சிகரமான வடிவம், நல்ல உடல், நல்ல மனநிலையை தருவதோடு கூர்மையான மூளையையும் அளிக்கிறதாம்.
நடனம் என்பது முழு உடல் பயிற்சியால் கிடைக்கும் அனைத்து பலன்களையும் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது. நடனமாடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் தொடர்பில் முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.