அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி ஒருவரை செவ்வாய்க்கிழமை (15) இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிசார் தெரிவித்தனர்
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சம்பவதினமானசெவ்வாய்க்கிழமை (15) சுற்றிவளைத்து சோதனையிட்டனர்
இதன் போது வியாபாரத்துக்காக கொண்டு வந்த 810 கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.