அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ByEditor 2

Apr 16, 2025

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கடலில் ஏற்படும் அவசர நிலைமைகளின் போது விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த இலக்கத்தினூடாக, கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்கள், மாலுமிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு உடனடி மற்றும் நேரடி தொடர்பை வழங்குவதன் மூலம், SLCG செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேசிய நோக்கங்களை வலுப்படுத்தவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய ஆணையுடன், கடலோர பாதுகாப்பு திணைக்களம் எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடலில் ஏற்படும் பிற அவசரநிலைகள் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் நிலைமைகளை கட்டுப்படுத்த பங்களிக்கிறது. 

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மீனவர்கள், கடலுடன், தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் 106 என்ற அவசர எண்ணைப் பயன்படுத்தி கடல்சார் அவசரநிலைகளை உடனடியாகப் புகாரளிக்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *