ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

ByEditor 2

Apr 14, 2025

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியை வென்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *