வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 

ByEditor 2

Apr 12, 2025

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதுவும் குறிப்பாக காலையில் எழுந்தவுடன் ஒரு சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம்.

இந்தியர்கள் வழக்கமாக காலை மற்றும் மற்ற வேளைகளில் உணவு சாப்பிடும் பொழுது நெய்யை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். இது அவர்களின் உடலில் ஏகப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பலருக்கும் பிடித்தமான நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுவது போன்று காலையில் வெறும் வயிற்றுடன் இருக்கும் பொழுது சுடு நீருடன் கலந்து குடிக்கலாம். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் | Ghee With Warm Water Benefits In Tamil

நெய்யை வெறுமனே உணவில் சேர்த்து சாப்பிடுவதை விட சுடுநீரில் கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனின், நெய்யில் DHA மற்றும் CLA போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது.

குடல் ஆரோக்கியம் முதல், சரும ஆரோக்கியம் வரையிலான பல குறைபாடுகளை நிவர்த்திச் செய்கிறது.

அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் சுடுநீரில் நெய் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகளை பதிவில் பார்க்கலாம்.

சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா?

1. ஆயுர்வேதத்தின் படி, நெய் உள்ள கனிமங்கள் செரிமானத் தீயை தூண்டிவிட்டு, உணவுகள் சீராக செரிமானமடையச் செய்கிறது. அத்துடன் நெய் குடலின் சுவற்றில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, செரிமான செயல்முறை மென்மையாக்கும். அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற நோய்களுக்கும் முடிவுக் கொடுக்கும்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் | Ghee With Warm Water Benefits In Tamil

2. காலையில் எழுந்ததும் சுடுநீரில் நெய் கலந்து குடிப்பவர்களுக்கு குடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும். இப்படி நடந்து விட்டால் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், உடல் சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

3. நெய் மற்றும் சுடுநீர் காலையில் குடிப்பவர்களின் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, வயிற்றைச் சுற்றியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும். இது பல நாட்கள் போராடியும் குறையாத எடையை குறைக்கும்.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் | Ghee With Warm Water Benefits In Tamil

4. நெய்யில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்பு சருமத்தை நீரேடற்றத்துடனும், உடலினுள்ளே பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். இதிலுள்ள கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு இயற்கை பொலிவை தருகிறது. அதே போன்று நெய்யில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

5. நெய் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என தெரிந்திருப்போம். இதனால் அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் செறிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதுவும் சுடுநீரில் நெய் கலந்து குடிக்கும் போது, நீண்ட ஆற்றல் கிடைக்கும். இதனால் மாணவர்கள் தினமும் சாப்பிடுவது நல்லது.

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் | Ghee With Warm Water Benefits In Tamil

6. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மூட்டு விறைப்பைக் குறைக்கும் தன்மை நெய்க்கு உள்ளது. ஏனெனின் அதிலுள்ள வைட்டமின்கே2 உள்ளது, இது எலும்புகளில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.

7. நெய்யில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகிய நல்ல ஹார்மோர்களின் உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது. மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது மற்றும் PMS அறிகுறிகள குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் போன்ற மாதவிடாய் கால அறிகுறிகள் என்பவற்றிற்கு நெய் நிரந்தர நிவாரணமாக உள்ளது.   

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் | Ghee With Warm Water Benefits In Tamil

யாருக்கெல்லாம் ஆபத்து

  • பித்தப்பை கற்கள்( Gallbladder stone) உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • பலன்களை விரைவாக பெறுவதற்காக அதிக நெய் போடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் அதனால் வேறு விதமான பிரச்சினைகள் வரக்கூடும். (1 tsp / 1 tsp)  

முக்கிய குறிப்பு

வெறும் வயிற்றில் சுடுநீர் மற்றும் நெய் கலந்து குடித்து, சரியாக 20 நிமிடத்திற்கு பின்னர் தான் சாப்பாடு சாப்பிட வேண்டும். அப்போது தான் முழு பலனையும் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *