பொதுவாக நம்மிள் பலர் இனிப்புக்கள் அதிகமாக சாப்பிட்டால் ஏதாவது நோய் வரும் என பயந்து, கட்டுபாட்டில் இருப்பார்கள்.
மாறாக அதிகமானோர் விரும்பி சாப்பிடும் Dark chocolate சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும் எனக் கூறப்படுகிறது.
Dark chocolate-ல் உள்ள கொக்கோ மற்றும் காஃபைன் சருமப் பிரச்சினைகளை சரிச் செய்கிறது. மற்றும் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் சருமத்தில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்ஸிற்கு எதிராகவும் போராடுகிறது.
Dark chocolate சாப்பிடும் ஒருவரின் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்குமா? என்பதனை நேரடியாக கேட்டால் அதற்கான பதில் கிடையாது. ஏனெனின் அது தன்மையை பொறுத்து வேறுப்படும்.
இது தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வில், Dark chocolate-ல் உள்ள ஃபிளவவனாய்டுகள் சருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, சருமத்தை ஹைட்ரேட்டிங்காக வைக்கும். அதே போன்று நிறைய தண்ணீர் குடித்து வந்தாலும் சருமம் புது பொலிவுடன் அழகாக இருக்கும்.