புத்தாண்டை முன்னிட்டு விசேட சோதனை

ByEditor 2

Apr 11, 2025

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட  அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை (10) காலை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள்,அங்காடி வியாபாரிகள் என நூற்றுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளையும்,பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

சுற்றுவளைப் போது பாவனைக்கு தகாத தராசுகள் ,முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகள் போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்தமை, நிறை குறைவாக விற்பனை செய்தமை  உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . மேற்குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களில் இருந்து நிறுத்தல், அளத்தல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கு செய்ய தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *