பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ByEditor 2

Apr 10, 2025

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் முப்பத்தேழாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று (37,463) புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இவற்றில், அதிகம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் முப்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 மின்சார வாகனங்கள்

மேலும், 530  கார்கள், 939 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், 610 டிராக்டர்கள், 114 பேருந்துகள், 182 கை டிராக்டர்கள், நூற்று நான்கு லாரிகள்,  பவுசர்கள் மற்றும் 195 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூடுதலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திர திறன் கொண்ட 247 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 74,410  என  மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *