நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா?

ByEditor 2

Apr 9, 2025

தற்போது இருக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அதிக நீர்ச்சத்து உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் இப்போது எங்கு பார்த்தாலும் ரோட்டு கடைகளில் பொட்டி கடைகளில் குடிபான விற்பனையாளர்கள் அதிகம்.

அதில் மிகவும் பிரபலமானது இந்த கரும்பு சாறு தான். கோடை காலத்தில் கரும்பு சாறு நிறைய நற்பலனை தருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளும் கரும்பு சாறு குடிக்கலாமா வேண்டாமா என்பது பலரும் அறியாத புதிர்.

நீரிழிவு நோய் இல்லையென்றால், கரும்புச் சாறு உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது புதியதாகவும் சுத்தமாகவும் இருந்தால் அதனால் நற்பலனை தர முடியும்.

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா? நிபுணர் கூறும் கருத்து இது தான் | Can Diabetics Drink Sugarcane Juice Expert Opinion

சந்தையில் கிடைக்கும் கரும்புச் சாற்றில் பல தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருக்கலாம். எனவே, சுத்தமான கடைகளில் இருந்து மட்டுமே கரும்புச் சாற்றை எடுத்து, அதில் எலுமிச்சை, உப்பு மற்றும் புதினா சேர்த்து குடித்தால் சிறந்த பலன் பெறலாம்.

இவ்வளவு நன்மை தரும் கரும்புச்சாறை நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா இல்லையா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா?

நீரிழிவு நோயாளிகள் கோடையில் கரும்புச் சாற்றையும் அருந்தலாம். இருப்பினும், கரும்புச் சாற்றை குடிக்க விரும்பினால் அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா? நிபுணர் கூறும் கருத்து இது தான் | Can Diabetics Drink Sugarcane Juice Expert Opinion

ஏனெனில் கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் அதன் சாற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. எனவே தான் நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாற்றை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடைகாலத்தில் கரும்புச் சாறுக்கு ஈர்க்கப்படுவார்கள் இது இயல்பானது தான்.  ஆனால் அதை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் கரும்புச் சாற்றை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ளலாம். இது அவர்களின் ஆரோக்கியத்தில் பங்கெடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா? நிபுணர் கூறும் கருத்து இது தான் | Can Diabetics Drink Sugarcane Juice Expert Opinion

மருத்துவர் கூறும் போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்பவர்களும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களும் இதை சிறிய அளவில் உட்கொள்ளலாம் என்று கூறுகிறார்.

கரும்புச் சாறு சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கிறது, எனவே நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா? நிபுணர் கூறும் கருத்து இது தான் | Can Diabetics Drink Sugarcane Juice Expert Opinion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *