குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்

ByEditor 2

Apr 7, 2025

தமிழகத்தில்   கோடை காலங்களில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கை, கால் மற்றும் வாய் நோய் என்று அழைக்கப்படும் ‘தக்காளி காய்ச்சல்’ பெரும்பாலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, கோடை காலங்களில் இந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் | Tomato Flu In Children Symptoms

தக்காளி காய்ச்சல்

உடலில் சிவப்பு நிறத்தில் தக்காளி போல் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதால் இந்த பாதிப்பை தக்காளி காய்ச்சல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். 

கை, கால் மற்றும் வாய் நோயால், குழந்தைகளுக்கு தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல், அதிக காய்ச்சல் மற்றும் சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே சரி ஆகிவிடும்.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் | Tomato Flu In Children Symptoms

இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கை, கால் மற்றும் வாய் நோய் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படுகிறது.

பாடசாலைகளுக்கு செல்லும் குழந்தைகள், நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போதும் அவர்கள் கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் இந்த காய்ச்சலை தவிர்க்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *