உ/த பிரிவிற்கு விழிப்புணர்வு

ByEditor 2

Apr 7, 2025

கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் அதிகளவு உயர்தர மாணவர்களை உள்ளீர்க்கும் முகமாக அகில இலங்கை சைவ மகா சபையினால் விழிப்புணர்வு கருத்தமர்வு கள் யாழில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மாணவர்கள் கணித விஞ்ஞான பிரிவுகளில்  க.பொ.த உயர்தர பிரிவில் கல்வி கற்கும் நிலை பின் தள்ளப்பட்டு வருகின்ற நிலைமையில்  குறித்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில் சகோதர மொழி இனத்தவர்கள் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. 

இந்நிலையில் எமது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பட வேண்டியதன் காரணமாக விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டி ஏற்பட்டுள்ளது. மேலும் ஏனைய துறைகளில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் வேலையின்மை நிலவுகின்றது.

ஆனால்  கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கின்ற போது பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கருப்பொருட்களை மையமாகக் கொண்டு  விழிப்புணர்வு கருத்தரங்கு யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கு விசேட திட்டங்களும் அகில இலங்கை சைவமாக சபையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(6)வலிகாமம் பகுதி மாணவர்களை இலக்கு வைத்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்  க.பொ.த  சாதாரண தரத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதன்போது அகில இலங்கை சைவமாக சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார் , சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி பொன் ராசா , சமாதான நீதவான் அருள் சிவானந்தன் , துறை சார்ந்த ஆசிரியர்கள் , மருத்துவர்கள் , பொறியியலாளர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *