வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் சனிக்கிழமை (5) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் அவரது ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட போது பிரதான வீதியால் வேகமாக மோட்டார் சைக்கிள் இருவர் மீதும் மோதியுள்ளது.
இதில், காயமடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.