பகல் முழுவதும் ஏசி அறையில் இருக்கீங்களா?

ByEditor 2

Apr 3, 2025

பொதுவாக பெரிய பெரிய கம்பனிகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் ஏசி வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு வசதியானவர்கள் வெயிலில் இருப்பதை விட ஏசியில் இருப்பது தான் அதிகம்.

கோடைக்காலங்களில் அதிகமாக வெப்பம் இருக்கும். இதனை கட்டுக்குள் வைப்பதற்காகவே ஏசி பாவனைக்கு வந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் நவீன மயமாக்கலினால் ஏசி இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏசியில் இருந்தாலும் கோடைக்கால வெப்பத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக குளிர் பானம் மற்றும் குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுகிறார்கள்.

மாறாக நாள் முழுவதும் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இருப்பது உடலுக்கு ஏகப்பட்ட ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. ஏசியினால் சருமத்தில் எதிர்மறையான விளைவுகள் அதிகமாக ஏற்படும்.

அந்த வகையில், நீண்ட நேரம் ஏர் கண்டிஷனிங் (ஏசி) பொருத்தப்பட்ட அறையில் இருப்பதால் ஏற்படும் சரும பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் இரண்டையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.      

 சரும ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

1. ஏசியில் அதிக நேரம் இருக்கும் ஒருவருக்கு ஈரப்பதம் படிபடியாக குறையும்.

2. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிக எண்ணெய் சமநிலை இருக்கும், அதே நேரத்தில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெய் சமநிலை குறைவாக இருக்கும். இதில் நீர் சமநிலை குறைவாக இருந்தால் சருமத்தில் வறட்சி ஏற்படும்.

3. ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாச தொற்றுகள் ஏற்படும். ஏனெனின் குளிர் காற்று உடல் முழுவதும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இதனால் தொற்றுக்கள் இலகுவாக உடலுக்குள் சென்று ஆபத்தை ஏற்படுத்தும்.

4. ஏசி அறையில் தூங்கும் ஒருவரின் அரையில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து விடும். இது சருமம் மற்றும் கண்களில் இருக்கும் ஈரப்பதனையும் குறைத்து விடும். குளிர் காற்று கண்களுக்கு படும் பொழுது கண்களில் எரிச்சல், அரிப்பு, சிவந்து போதல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

5. ஏசி அறையில் படுத்து உறங்குவதால் தசைகளில் இறுக்கமும் மூட்டுகளில் வலியும் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குளிர்ச்சியான வெப்பநிலை தசைகளை இறுக்கமாக்கி மரத்து போக செய்யும். இதன் விளைவாகவே மூட்டு வலி அதிகரிக்கும்.

6. வழக்கமாக நாம் தூங்கும் அளவை விட ஏசி பொருத்திய அறையில் தூங்குவது குறைவாகவே இருக்கும். ஏசியில் இருந்து வரும் சத்தம், மணம் இவை இரண்டும் தூக்கத்தை இல்லாமலாக்கி விடும். குளிர் அதிகமாக இருப்பதால் நடு இரவில் விழிக்கவும் வாய்ப்பு உள்ளது.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *