பிஸ்கெட் உடலுக்கு கேடு விளைவிக்கின்றதா?

ByEditor 2

Apr 2, 2025

காலை நேரத்தில் உணவுக்கு பதிலாக பிஸ்கெட் சாப்பிட்டு பசியை போக்குபவராக இருந்தால் இந்த எச்சரிக்கை பதிவை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

பிஸ்கெட்

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகையில் பிஸ்கெட் ஒன்றாகும்.

தினசரி பழக்கமாக இருக்கும் இதில் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும். மேலும், உடலுக்கு தீங்களிக்கும் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.

பிஸ்கெட் உடலுக்கு கேடு விளைவிக்கின்றதா? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல் | Hidden Dangers Of Biscuits Eat

மேலும், பிஸ்கெட்டுகளில் “ட்ரான்ஸ் ஃபேட்” எனப்படும் மாறுபட்ட கொழுப்பு நிறைந்திருக்கும். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கும்.

உலகம் முழுவதும் மக்கள் விரும்பும் பிஸ்கெட்டை அவ்வப்போது சாப்பிடலாம். ஆனால், அதையே தினசரி உணவாகப் பயன்படுத்த வேண்டாம்.

பிஸ்கெட் உடலுக்கு கேடு விளைவிக்கின்றதா? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல் | Hidden Dangers Of Biscuits Eat

இரவு நேரங்களில் பசித்தாலும், ரத்த சர்க்கரை குறைந்தாலும், பயணங்களில் உணவு கிடைக்காத சூழலில் இருந்தாலும், பிஸ்கெட் ஒரு விரைவான தீர்வாக அமையும்.

ஆனால், அதை ஒரு வழக்கமாக மாற்றாமல், அவ்வப்போது மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *