அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக முதலாம் தவணையின் முதல் கட்ட விடுமுறை மார்ச் மாதம் 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இதேவேளை, நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.