வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்

ByEditor 2

Mar 27, 2025

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், துரித உணவுக் கடைகள், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்றவற்றில் சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு புதன்கிழமை(26) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஆஜர் படுத்திய போது அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக தலா 25,000 , 15,000, 20,000, 10,000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

மேலும் ஹோட்டல், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாத விடத்து மூடுவதற்கான இறுதி உத்தரவு வழங்க நீதிவானினால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *