கள அதிகாரியை கட்டி வைத்து தீ வைப்பு

ByEditor 2

Mar 26, 2025

தோட்டத்தில் ஒரு கள அதிகாரி தாக்கி, நாற்காலியில் கட்டிவைத்து, எரியக்கூடிய பொருட்களால் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அந்த அதிகாரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம், நாகொட, மாபலகம, குடமலானவில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தனர்.

மாபலகா சென்ட்ரலில் உள்ள குடமலானா தேயிலை தொழிற்சாலையில் உள்ள பழைய பங்களாவின் அறையில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கள அதிகாரியின் அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தில் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு, தீயை அணைத்து உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தனர். தீ விபத்தில் அந்த நபரின் உடல், தலை மற்றும் முகம் எரிந்து போயுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ வைத்த நபரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *