COOP FED, சதொசவில் நிவாரண பொதி

ByEditor 2

Mar 26, 2025

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில், நாடளாவிய ரீதியில் உள்ள, சதொச மற்றும் COOP FED இல் கொள்வனவு செய்து கொள்ள முடியும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்   இணைந்து சமர்ப்பித்தனர். அந்த யோசனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், செவ்வாய்க்கிழமை (25) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதி ஒன்றை வழங்குவதற்கு   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,   2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்து இருந்தார்.

5,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய ‘காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று’ 2,500 ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளை தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும் COOP FED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *