நடிகர் மனோஜின் மறைவுக்கு அஞ்சலி

ByEditor 2

Mar 26, 2025

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று(25) மாலை மாரடைப்பால் காலமானார்.

மனோஜுக்கு திடீர் மாரடைப்பு

குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜுக்குச் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

நடிகர் மனோஜின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி | Many Celebrities Pay Tribute To Actor Manoj Death

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பல்லரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மனோஜின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளதுடன் இன்று மாலை தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 48 வயதான நடிகரும் இயக்குனருமான மனோஜ் மறைவு திரையுலகிலும், இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *