நடிகை பிந்து கோஷ் காலமானார்

ByEditor 2

Mar 16, 2025

80களில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருந்த நடிகை பிந்து கோஷ் மூப்பின் காரணமாக,உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

பிந்து கோஷ் 

தமிழ் சினிமாவில் கோவை சரளா, மனோரமா ஆகியோரை போன்று காமெடியில் கலக்கியவர் தான் பிந்துகோஷ்.

100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இறுதிசடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *