ஆயுர்வேத தேசிய மருத்துவமனை

ByEditor 2

Mar 24, 2025

பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் எட்டு மாடி கட்டிடத்தின் பணிகள் இந்த ஆண்டு நிறைவடைய உள்ளதுடன், அங்கு சிகிச்சை சேவைகள் ஆரம்பமாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட. இந்தப் கட்டிடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ பார்வையிட்டுள்ளார். 

குறித்த மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு  450 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தினாலும் 300 மில்லியன் ரூபாய் 2025ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்பட்டது.

இந்தப் புதிய கட்டிட வளாகத்தின் படுக்கை வசதி 340 ஆகும். 

கட்டண சிகிச்சைக்கான உயர்தர நவீன வசதிகளுடன் கூடிய அறைகளின் எண்ணிக்கை 82 ஆகும், 

இதில் அறுவை சிகிச்சை அறைகள், மருந்து உற்பத்தி வசதிகள், பஞ்சகர்மா அலகுகள் மற்றும் யோகா பயிற்சி அலகுகள் ஆகியவை அடங்கும்.

இந்தப் புதிய கட்டிட வளாகம், யாழ்ப்பாணம், கிழக்கு, கொழும்பு மற்றும் யக்கல பல்கலைக்கழகங்களில் இருந்து ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவம் பயிலும் 600 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிக்கான வசதிகளையும் வழங்கும்.

1929ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனை தற்போது 216 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது. 

இது 11 வார்டுகளைக் கொண்டுள்ளதுடன், கட்டண அறைகளையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *