க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

ByEditor 2

Mar 17, 2025

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகின்றது.

நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமாக 398,182 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 75,965 தனியார் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சை எழுதுபவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மண்டபங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *