இலங்கையை வந்தடைந்த போர்க்கப்பல்

ByEditor 2

Mar 16, 2025

பிரான்சிய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ‘PROVENCE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.

கப்பலின் விபரங்கள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த DESTROYER ரக ‘PROVENCE’ என்ற போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக Captain Lionel SIEGFRIED பணியாற்றுகின்றார்.

இதேவேளை ‘PROVENCE’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் நிர்வாகக் குழுவினர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர் 2025 மார்ச் 20 ஆம் திகதி தீவை விட்டு குறித்த கப்பல் புறப்பட உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *