மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்

ByEditor 2

Mar 16, 2025

பதுளை  மாவட்டம் பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம்  மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில்  தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் .

குறித்த  51 குடும்பங்களுக்கும் சனிக்கிழமை (15) அன்று 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

  பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  K.V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி, நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே. உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல்  மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

10 பேர்ச் காணியுடன் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் செலவிடப்படவுள்ளதுடன் . எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *