டெல்லி கேப்பிடல்ஸ்(DC) அணியின் தலைவர் பதவியை கே.எல் ராகுல்(K.L.Rahul) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 அணிகள் தங்களது அணித்தலைவரை அறிவித்துள்ளன.
ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய தலைவரை அறிவிக்காமல் உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலர் வேறு அணிகளால் வாங்கப்பட்டனர்.
குறிப்பாக ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் என கடந்த சீசன்களில் அவர்கள் இருந்த அணிகளுக்கு தலைவராக இருந்த வீரர்களே வேறு அணியால் வாங்கப்பட்டனர்.
அந்த வகையில் லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணிக்கு தலைவராகவும், கொல்கத்தாவில் இருந்து பஞ்சாப் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான், டெல்லியால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட கே.எல்.ராகுல் தான் அந்த அணியின் தலைவராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் தலைவர் பொறுப்பை நிராகரித்து உள்ளார்.