விவசாயத் திணைக்களத்தின் SMS சேவை

ByEditor 2

Mar 11, 2025

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது.

இதன் மூலம் 10 பயிர் வகைகளுக்குத் தேவையான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் உங்கள் கைபேசியில் பெறலாம். இதற்கு 1920 தொலைபேசி எண்ணை அழைத்து அல்லது KSMS இடைவெளி உங்கள் பெயர் குறிப்பிட்டு பயிர் எண்ணைக் குறிப்பிட்டு 1920 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி நெல் பயிருக்கு எண் 01 உம் மிளகாய் பயிருக்கு எண் 02 உம் சோளப் பயிருக்கு எண் 03 உம் பெரிய வெங்காயப் பயிருக்கு எண் 04 உம் உருளைக்கிழங்கிற்கு எண் 05 உம் புடலங்காய் பயிருக்கு எண் 06 உம் கத்தரிக்காய் பயிருக்கு எண் 07 உம் இட முடியும் என்பதுடன் தக்காளி பயிருக்கு எண் 08 உம் பப்பாளி பயிருக்கு எண் 09 உம் வாழைப் பயிருக்கு எண் 10 உம் இட்டு பயிருக்கேற்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *