வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசுவை, பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் அந்த சிசு, திங்கட்கிழமை (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
குவா… குவா… என்று அழுது கொண்டிருந்த இந்த சிசு, உடனடியாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிசுவின் உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.