இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் ஒருவரை , பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க அப்பெண் முற்பட்டபோது அவர் கீழே விழுந்து , ரயில் தளமேடையில் இழுத்துச் செல்லவிருந்தது.

அதனை அவதானித்த பங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி துரிதமாக செயல்பட்டு நேரத்தில் , பெண்ணின் உயிரை காப்பாற்றினார்.
நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் காட்சியைக் காட்டும் காணொளியை இந்திய ரயில்வே அமைச்சு வெளியிட்டது.
அதேவேளை சற்று தாமதித்திருந்தாலும் அப்பெண் ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளிக்குள் விழுந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விரைவாகச் செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பாதுகாவல் அதிகாரியை அமைச்சு பாராட்டியுள்ளது.