யாழ் – திருச்சி இடையே விமான சேவையை ஆரம்பம்

ByEditor 2

Mar 9, 2025

இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவைகளுக்கான அதிக கேள்வியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பாதை வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு பிரபலமாகிவிட்டதாகவும், தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படுவது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *