சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தொடர்பில் நாசா அறிவிப்பு

ByEditor 2

Mar 11, 2025

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தொடர்பில் நாசா அறிவிப்பு | Nasa Announces Sunita Williams Return To Earth

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றனர்.

போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தற்போது வரை உள்ளனர்.

அவர்களது பயணம், தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில் அவர்களைப் பூமிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது தொடர்பில் நாசா அறிவிப்பு | Nasa Announces Sunita Williams Return To Earth

எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16 ஆம் திகதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகிய இருவரும், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *