கெட்ட கொழுப்பு மெழுகு போல கரைய

ByEditor 2

Mar 10, 2025

டல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு போன்ற பிரச்சனைகள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை. உடல் பருமனுடன் பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் கெட்ட கொழுப்பு தான்.

ஆனால் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு அவ்வளவு புரிதல் இல்லை. எடை குறைக்க, மக்கள் உணவுமுறை முதல் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை என அனைத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

இதற்கு சியா விதைகள் பெரிதும் உதவுகிறது. சியா விதைகளை வேறு சில பொருட்களுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு குறையும். இது விரைவாகவும் எடை இழக்க செய்யும். கெட்ட கொழுப்பு கொஞ்சம் கூட உடலில் இருக்காது.

கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த விதை இருந்தால் போதும் | Fast Weingt Loss Tips Eat Chia Seeds Lemon Health

 எடை இழப்பிற்கு சியா விதைகள்

சியா விதைகளில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகின்றது. இது எடை இழப்புக்கு மிகவும் பயன் தரும்.

உடலில் மறைந்திருக்கும் கெட்ட கொழுப்பை உறிஞ்சுவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இது தவிர, சியா விதைகளில் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் காணப்படுகின்றன.

அவை தசைகளின் வலிமையை அதிகரிக்கும். இது தவிர சியா விதைகளை சாப்பிடுவது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த விதை இருந்தால் போதும் | Fast Weingt Loss Tips Eat Chia Seeds Lemon Health

வேகமாக எடை இழக்க ஆசைப்பட்டால் சியா விதைகளை கிரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்ளலாம். காரணம் கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. கிரீன் டீயில் கொழுப்பை எரிக்கும் கூறுகளும் நிறைந்துள்ளன. சியா விதைகளை கிரீன் டீயுடன் கலந்து சாப்பிடுவது விரைவான எடை இழப்பை கொடுக்கும்.

 வீட்டில் இருக்கும் எலுமிச்சையை சியா விதைகளுடன் எடுத்துக்கொள்ளலாம். இந்த பானம் உடலில் குவிந்துள்ள நச்சுக்களை சுத்தப்படுத்த வேலை செய்கிறது.

இது உடல் கொழுப்பையும் குறைக்கிறது. சியா விதைகளை எலுமிச்சை நீருடன் சேர்த்து உட்கொள்வதும் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இதனால் தோல் பளபளக்கும். எடை இழப்பிற்கும் பயன்படும்.

கெட்ட கொழுப்பு மெழுகு போல கரையணுமா? இந்த விதை இருந்தால் போதும் | Fast Weingt Loss Tips Eat Chia Seeds Lemon Health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *