நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்…

ByEditor 2

Mar 8, 2025

அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அத்திப்பழம்

இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க, எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராட அத்திப்பழம் பெரிதும் துணை நிற்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்... கட்டாயம் எடுத்துக்கோங்க | Fig Fruit For Diabetics Patient Health Benefits

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் அத்திப்பழத்தில் சுமார் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் இயற்கைச் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்... கட்டாயம் எடுத்துக்கோங்க | Fig Fruit For Diabetics Patient Health Benefits

நீரிழிவு நோயாளிகள்

அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், 35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும்.

மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுவதுடன், இதிலுள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்... கட்டாயம் எடுத்துக்கோங்க | Fig Fruit For Diabetics Patient Health Benefits

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *