சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது

ByEditor 2

Mar 3, 2025

சட்டவிரோதமான முறையில் போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றி வந்த மூன்று சந்தேக நபர்களை  இன்று (3)   கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி அனுமதி பத்திரம்

 ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9 மாடுகளை அடைத்து சிறிய வாகனம் ஒன்றில் அடைத்து வைத்த நிலையில் ஏற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்திலிருந்து 9 மாடுகள் உடல் பலவீனமான முறையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சில மாடுகள் மீது காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிருகவதை சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *