25 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று பிள்ளைகளின் தாயான முப்பத்தாறு வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குறித்த பெண் மட்டக்குளிய பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரோஷனின் மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27, 2021 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையின் போது ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்படி, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.