கொழும்பு குற்றப்பிரிவு , 500,000 சட்டவிரோத போதைப்பொருள் குளிசைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொப்பரா சந்திப் பகுதியில் சனிக்கிழமை (01).அன்று இரவு மேற்கொண்ட சோதனையின் போது, 500,000 சட்டவிரோத போதைப்பொருள் குளிசைகளை வேனில் கொண்டு சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.