இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் வாங்கிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (01) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்னேவ நகரில் புல் வெட்டும் இயந்திரத்தை பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிக்கு விற்பனை செய்வது தொடர்பில் வியாபாரியிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பெற முயன்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.